இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வெள்ளி, 30 நவம்பர், 2018

திண்டுக்கல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு










பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30/11/2018

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30/11/2018

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் இன்று 30 11 2018 காலை 10 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு வின் நிர்வாகிகளான திருவேங்கடம், ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர் தேவை, சுகாதாரம் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டன.















செவ்வாய், 27 நவம்பர், 2018

பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்

பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்

                    இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பொறுப்பாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் ஆகியோர் புயல் நிவாரண நிதி திரட்டினர் . பள்ளியின் சார்பில் ரூபாய் 1250 திரண்டது. இந்த நிதி திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச்  சங்க அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.


வியாழன், 22 நவம்பர், 2018

வினாடிவினா புதிர்ப் போட்டியில் கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

வினாடி வினாப் போட்டியில் இரண்டாம் இடம்
பள்ளிக் கல்வித்துறை RMSA சார்பில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெற்றது.  வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான வினாடி வினா நிகழ்ச்சி வினாடி வினா நிகழ்ச்சி வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 34 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். இம்மாணவர்களுக்கு வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் திரு பிச்சைமுத்து அவர்கள் பாராட்டி பரிசளித்தார்.