செவ்வாய், 24 அக்டோபர், 2017

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 24/10/2017


பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 24/10/2017

இன்று நம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. திருவேங்கடம், பொருளர் திரு. இராமமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் சூழ நடைபெற்றது. மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பது, டெங்கு விழிப்புணர்வு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


செவ்வாய், 10 அக்டோபர், 2017

தூய்மை பாரதம் கட்டுரைப்போட்டி மாவட்ட அளவில் பரிசு

தூய்மை பாரதம் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு

தூய்மை பாரதம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி பதினோராம் வகுப்பில் படிக்கும் மாணவி செல்வி.ச.மகிளாதேவி  இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன. அம்மாணவிக்குப் பள்ளியின் சார்பிலும் பரிசு வழங்கப்பட்டது.