இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

புதன், 17 செப்டம்பர், 2014

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை




      விளையாட்டுப் போட்டிகளில் சாதனை

           திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர். கடந்த மாதம் வேடசந்தூர் குறுவட்ட அளவிலான பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் கோ.இராமநாதபுரம் அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் நம் பள்ளி மாணவர்கள் பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் முதல் இடம் பெற்றனர். பதினேழு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்தனர்.
 
           இதே குறுவட்ட அளவிலான பதினான்கு மற்றும் பதினேழு மாணவர்களுக்கான பூப்பந்து விளையாட்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.  பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவருக்குரிய உயரம் தாண்டும் போட்டியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் எ.மணிகண்டன் முதல் பரிசுடன் பதக்கத்தைப் பெற்றான். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. மேலும் இம்மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட சாதனை


       செப்டம்பர்  21,22  அன்று திண்டுக்கல் மாவட்ட அளவிலான பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் காசிபாளையம் அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நம் பள்ளி மாணவன் எ. மணிகண்டன் பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்க்குரிய உயரம் தாண்டும் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றான். மேலும் பத்தொன்பது வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குரிய பூப்பந்து போட்டியில் மாவட்ட
அளவில் முதல் இடம் பெற்றனர்.  பதினான்கு வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர். சிறப்பாக விளையாடி மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் அடுத்து நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


           போட்டிகளில் சிறப்பாக விளையாடிப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. க.செ.அருள்ஜோதி அவர்கள் மற்றும்  பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.ச. பீட்டர் நெல்சன் ராஜ் அவர்கள்  பாராட்டினர்.  மண்டல அளவிலான போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்க அனைத்து ஆசிரியர்களும் ஊக்குவித்துப் பாராட்டினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக