வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

விளையாட்டுப் போட்டிகள் - பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல்

பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் - குறுவட்ட, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிய நிகழ்வு - 24/8/2017


















வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் - நிழற்படங்கள் அப்படியே

நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் 

              இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இன்று 24/8/2017 மாலை 3 மணி அளவில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நாட்டுப்புறக்கலைகள் சார்ந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி அ. பீட்டர் அவர்கள் நாட்டுப் புறக்கலைகள் நம் மாநிலத்தின் பண்பாட்டை எடுத்துரைப்பன. நம் மண்ணின் மணத்தை வெளிக்காட்டுவன. இன்றைய மேற்கத்தியக் கலைகள் யாவும் நாட்டுப்புறக்கலைகளின் வளர்ச்சியே. பாரம்பரியமிக்க இந்தக்கலைகளை நாம் மீட்டு வளர்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றுரைத்தார். மாணவர் செல்வன், ச.மகிளேஸ் குமார் நிகழ்ச்சிக்குத் தொகுப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் கும்மிப்பாட்டு, கரகம், தேவராட்டம், தப்பாட்டம், நாட்டுப்புறப்பாடல்கள், காவடியாட்டம் முதலான கூறுகள் கண்களுக்கு விருந்தாயின. பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி. இரா. துர்க்காதேவி, திருமதி. க.விஜய பிரியா ஆகியோர் மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்து நெறிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு மிகவும் உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது எனில் அது மிகை இல்லை. 

































ஓவியக் கண்காட்சி நிகழ்வுகள் - நிழற்படங்கள்