இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

100399
எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 15 நவம்பர், 2018

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

        இன்று  இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. ந. திருவேங்கடம் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.   தேர்ச்சி விழுக்காடு உயர்த்துதல், மாணவர்களின் சுகாதாரம், ஒழுக்கம், பள்ளியின் அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் முதலான பொருள்களின் மீது விவாதம் நடைபெற்றது. பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு.வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக