இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 21 மே, 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி முடிவுகள் 2014-2015



எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி முடிவுகள் 2014-2015

              இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இந்தக்கல்வி ஆண்டில் தேர்வெழுதிய 57 மாணவர்களுள் 53 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.  பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 93 சதவீதம்.

477/500  மதிப்பெண் பெற்று கி.கீர்த்தனா முதலிடத்திலும்     469/500    மதிப்பெண் பெற்று இரா. கோகுல் இரண்டாம் இடத்திலும்  463/500 மதிப்பெண் பெற்று செ.கவிதா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

 

 கி.கீர்த்தனா 477/500
 




 இரா.கோகுல் 469/500








 


 செ. கவிதா 463/500







பாட வாரியாகத் தேர்ச்சி சதவீதம் வருமாறு;

தமிழ்                - 98%
ஆங்கிலம்            -93%
கணிதம்              -100%
அறிவியல்           -100%
சமூக அறிவியல்     -95%

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்:

     கணிதப் பாடத்தில் மூன்று மாணவர்களும், அறிவியலில் இரண்டு மாணவர்களும், சமூக அறிவியலில் மூன்று மாணவர்களும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். 
     22 மாணவர்கள்  400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

     பள்ளி அளவில் சாதனை புரிந்த மாணவர்களையும், கற்பித்த  ஆசிரியர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர்  திரு.அ. வடிவேல் எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., அவர்கள் பாராட்டினார். மேலும் அம்மாணவர்களைப் பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ.மோகன், பெ.ஆ.க. தலைவர், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர் திரு.வ.கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்து பாராட்டினர்.





வெள்ளி, 8 மே, 2015

Plus two result 2015 - GHSS Landhakkottai



         மார்ச் மாதம் நடைபெற்ற மேனிலை அரசு பொதுத் தேர்வில் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி 76 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 54 மாணவர்களில்  41 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1062/1200 மதிப்பெண்களுடன்  தி.கலாவதி  முதல் இடத்தையும், 1003/1200 மதிப்பெண்களுடன் ஜெ.ரோஜா  இரண்டாம் இடத்தையும், 971/1200 மதிப்பெண்களுடன் க.ராஜலட்சுமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பாட வாரியாக பெற்ற தேர்ச்சி சதவீதம் வருமாறு:
தமிழ்           - 100%
ஆங்கிலம்      - 100%
கணிதம்        - 76%
இயற்பியல்     - 96%
வேதியியல்     - 81%
உயிரியல்       - 100%
கணினி அறிவியல்-97%
           முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., அவர்கள் பாராட்டினார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. ஆ. மோகன், கிராம கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம் ஆகியோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்பினர் பாராட்டினர். முதுகலை ஆசிரியர் திரு. சௌந்தரராஜன், இளநிலை உதவியாளர் திரு.கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்து பாராட்டினர்.

புதன், 6 மே, 2015

HIGHER SECONDARY EXAMINATION RESULTS 2015


          பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களின் பொதுத் தேர்வு முடிவுகளைப் பள்ளியின் வலைப் பக்கம் மூலமாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

                                                                                       -- தலைமையாசிரியர்
HSC RESULT 2015 LINK 1

HSC RESULT 2015 LINK 2

HSC RESULT 2015 LINK 3

HSC RESULT 2015 LINK 4