செவ்வாய், 26 ஜூன், 2018

மாணவிகளுக்குப் பரிசு

             மாணவிகளுக்குப் பரிசு

               கடந்த பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் நமது பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி மகிளா தேவி மற்றும் நூறு விழுக்காடு வருகை புரிந்த மாணவி கௌரி ஆகியோர்க்கு நம் பள்ளியில் இருந்து பாப்பம்பட்டி அரசு மேனிலைப்பள்ளிக்குப் பணிமாறுதலில் சென்ற ஆங்கிலப்பாட முதுகலை ஆசிரியர் திரு.ப.வீரமணி அவர்கள், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்கள் மூலமாகப் பரிசுகள் வழங்கினார்.    வாழ்த்துகள்.செவ்வாய், 5 ஜூன், 2018

உலக சுற்றுச்சூழல் தினவிழா நிகழ்வுகள்

          இன்று 5/6/2018 உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. காலை வழிபாட்டுக்கூட்டத்தில் உறுதி மொழி எடுத்து க் கொண்டனர். தொடர்ச்சியாக பிளாஸ்டிக் ஒழிப்பு ப் பற்றி கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.