வியாழன், 13 நவம்பர், 2014

மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் சாதனைமண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் இலந்தைக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மண்டல அளவிலான பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் சாதனை செய்துள்ளனர். நேற்று 12/11/2/14  புதன் கிழமை திண்டுக்கல், பழனி, தேனி, உத்தமபாளையம் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம், மறவப்பட்டி, புனித குழந்தை இயேசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

     ஏற்கெனவே மாவட்ட அளவில் பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற நம் பள்ளி மாணவர்கள் பிரபாகரன், சபரீஸ்வரன், சிவசங்கர், விஜய், கோபிநாத், விக்ரம், யோகநாதன், பிரசாத் ஆகியோர்  இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

     போட்டியில் வெற்றிபெற்றுப் பெருமை தேடித் தந்த மாணவர்களைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கமூட்டினார்.  மாணவர்களை விளையாட்டுக்குச் சிறப்பாகப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் அவர்களையும் பாராட்டினார்.  அனைத்து ஆசிரியர்களும் சாதனை மாணவர்களைப் பாராட்டினர்.   

ஞாயிறு, 2 நவம்பர், 2014

புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு


          திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி  அவர்கள் பணியிட மாறுதலில் தாழையூத்து அரசு மேனிலைப் பள்ளிக்குச் சென்றார். 31.10.2014 வெள்ளிக்கிழமை பணிவிடுப்பு செய்யப்பட்டார். அவர் மென்மேலும் பதவி உயர்வுகள் பெற்றுக் கல்வித்துறையில் வலம்வர  வாழ்த்துகிறோம்.

                 அதே நாளில்   திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய  திரு அ . வடிவேல் என்பார் பதவி உயர்வு பெற்று  நம் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பணி ஏற்றுள்ளார். அவர் தலைமையில் பள்ளியில் கற்றல் கற்பித்தல் மேம்பாடு அடைந்து சிறப்படைய மனமார வாழ்த்துகிறோம். 

வியாழன், 16 அக்டோபர், 2014

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக் கணினிகள் வழங்கும் விழா - 15/10/2014திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் நேற்று 15/10/2014 செவ்வாய்க்கிழமை மேனிலை மாணவர்களுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.  இந்த விழாவில் மாண்புமிகு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. எஸ். பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு அறுபது மாணவர்களுக்கு மிதிவண்டிகளையும் நாற்பத்தாறு மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்த விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியருடன் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பொருளர், கிராமக் கல்விக் குழுத் தலைவர், கட்டடக் குழுத் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

விலையில்லா மடிக்கணினி & மிதிவண்டி வழங்கும் விழா

அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி & மிதிவண்டி வழங்கும் விழா

  நாள்: 15-10-2014 புதன் கிழமை               நேரம்:  முற்பகல் 11 மணி
                                              நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:       திரு.வீ.முத்துசாமி அவர்கள், முதுகலை ஆசிரியர்
தலைமை:          திருமதி.க.செ.அருள் ஜோதி அவர்கள், தலைமைஆசிரியர்
முன்னிலை :       திரு.ஆ.மோகன் அவர்கள்ஊராட்சித்தலைவர்,
                            இலந்தக்கோட்டை
மடிக்கணினி & மிதிவண்டி வழங்கிச்
சிறப்புரை :       மாண்புமிகு எஸ். பழனிச்சாமி அவர்கள்,
                         வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
வாழ்த்துரை:  திருமதி. நாகம்மாள் அவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்
                      திரு.கண்ணன் அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
                     திருமதி.காஞ்சனா பாண்டியன்அவர்கள், ஒன்றியக்குழு                    உறுப்பினர்
                     திரு.வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
                    திரு.ராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்
                    திரு. திருவேங்கடம் அவர்கள், கிராமக் கல்விக்குழுத்        தலைவர்
                   திரு. நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
                   திரு. சுப.ரெங்கசாமி அவர்கள், மேனாள் பெ.ஆ.க.தலைவர்
                         மற்றும் உள்ளூர்ப் பெருமக்கள்

நன்றியுரை:  திருமதி.கோ. பாரதமணிஅவர்கள், முதுகலைத்            தமிழாசிரியர்
தொகுப்புரை: திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண் 

வெள்ளி, 10 அக்டோபர், 2014

அறிவியல் கண்காட்சி நிகழ்வுகள் - 10/10/2014


அறிவியல் கண்காட்சி நிகழ்வுகள் 

          இன்று 10/10/2014 வெள்ளிக்கிழமை இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி க.செ. அருள்ஜோதி அவர்கள் இந்த அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர்   திருமதி. மு.சகுந்தலா அவர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தார். காற்றாலை, எரிமலை, செயற்கை ரத்தம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மனித உடற்கூறுகள், மாற்று எரிசக்தி, புவி வெப்பமயமாதல், இயற்பியல் விதிகளுக்கான படைப்பாக்கங்கள் ஆகியன இந்தக்கண்காட்சியில் சிறப்பாக இடம்பெற்றன.  பள்ளி மாணவர்கள் வகுப்பு வாரியாகப் பார்வையிட்டனர். இதில்,  சுண்ணாம்பு நீர்க் காற்றால் பலூனை நிரப்புதல் எனும் படைப்பைக் கண்காட்சியில் கொணர்ந்த மாணவி ச. மகிளாதேவி , பழனி கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள் – போட்டிகளும் நிகழ்வுகளும்

இன்று 26/09/2014 வெள்ளிக்கிழமை உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் நிகழ்த்தப்பட்டது

.  மத்திய அரசால் வழங்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பற்றிய விளக்கப்படங்கள், தொடரட்டைகள் பயன்படுத்தி மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. மேலும் அரசு அறிவித்துள்ளவாறு மாணவர்களிடையே மக்கள் தொகை தொடர்பான வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. ஏ, பி, சி எனும் மூன்று குழுவில் சி குழு வெற்றி பெற்றது. அந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.