வெள்ளி, 29 நவம்பர், 2013

மாணவர்களின் படைப்புகள்

மழைநீர்                                                                                
மண்ணுலகம் பெற்ற
மகத்தான வரம் மழை – அதன்
மாண்புக்கு இல்லை நிகரான விலை
தன்னிகரற்ற தரணிக்கு – அதன் 
தனிப்பெருமை 
முதல் காரணம் மழை
உலகின் உயிர் சக்தியாய்
ஒப்பற்ற இயற்கை வளங்களும்
எண்ணற்ற வளங்களும்
ஏராளமான பயிர்களும்
தோன்றிடக் காரணம் மழை
நீர் வளம் இல்லையேல்
நிலவளம்  இல்லை
நிலவளம் இல்லையேல்
பயிர் வளம் இல்லை
பயிர் வளம் இல்லையேல்
உயிர்வளம்  இல்லை
மழைநீர் உலகின் உயிர் நீர் !      
கோ. சுதர்சனன், ஒன்பதாம் வகுப்பு, அ  பிரிவு.  

     குடிநீர்   
இரா.கோகுல், ஒன்பதாம் வகுப்பு
அ பிரிவு 
                  உயிரினங்களின் ஜீவசக்தி 
                  உடல் நலத்தின் மகாசக்தி
                  அதன் தூய்மை காப்பது நம்                   கடமை
                  அதைக் காக்க மறப்பது                       முழுமடமை   


திங்கள், 25 நவம்பர், 2013

பள்ளி வளர்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர்

பள்ளி வளர்ச்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் வகுப்பறை உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பொருட்டு ஐந்து மேஜைகளை வழங்க ஏற்பாடு செய்த இலந்தக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் திரு. ஏ. மோகன் அவர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர்   திரு. பா. கதிரேசன் அவர்கள் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கிறார்.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

தலைமையாசிரியரின் சாதனைப் பயணங்கள்

        “அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதியார்.  கல்விப் பணியே மகத்தான பணி. மனிதன் சமூகத்தில் பெரும் புகழும் பெற்று விளங்கக் கல்வி அவசியமாகும். வாழ்வில் ஒளி ஏற்றும் கல்வியைக் கற்பிக்கும் பணியில் தன்னிறைவு கொண்டவராகச் சாதனைகள் பல நிகழ்த்தியவராகத் திகழ்கிறார் நம் பள்ளித் தலைமையாசிரியர் திரு. பா. கதிரேசன் எம்.ஏ.,எம்.எட். அவர்கள்.  

பயிற்றல் பகலவன் விருது:  
1991  ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியராகச் சேர்ந்தார் நம் தலைமையாசிரியர்.  “ கடன்என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு” என்பார் திருவள்ளுவர்.  எடுத்துக் கொண்ட செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் வல்லமை பெற்ற தன்மையினராக நம் தலைமையாசிரியர் ஆரம்பம் முதல் பல முறை நூறு விழுக்காடு தேர்ச்சி காட்டியமையால் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகரன் ஐ.ஏ.எஸ்.  மற்றும் நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தாமோதரன் அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றார்.  மேலும், கடலூர் மாவட்டம் பன்னாட்டு அரிமா சங்கம் இவருக்குப் “ பயிற்றல் பகலவன்” எனும் விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.

யோகாசனம் மற்றும் தியான வகுப்புகள் : 
நம் தலைமையாசிரியர் யோகாசனக் கலையில் தேர்ந்தவர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர்.  யோகக் கலையின் தேஜஸ் நம் தலைமையாசிரியரின் முகத்தில் இயல்பாகவே உள்ளது.   இவர் கடலூரில் பணியாற்றி வரும் போதே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஆசிரியர்களுக்கு யோகாசனம், தியானம், இயற்கை உணவுப் பயிற்சி அளிக்கும் கருத்தாளராகப் பங்கேற்றுள்ளார்.   
பல்வேறு சமூகச் சாதனைகள்
        எய்ட்ஸ் விழிப்புணர்வு, குருதி,கண் கொடை விழிப்புணர்வு, கார்கில் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி திரட்டி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைத்தமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, புராதனச் சின்னங்கள் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திச் சாதனை புரிந்துள்ளார். 

தலைமையாசிரியர் பணியில் சாதனைகள்:    
 மரபை மாற்றிய மாமனிதர்: 
         நம் தலைமையாசிரியர் தேனி  மாவட்டத்தில்  உயர்நிலைப் பள்ளி ஒன்றில் பொறுப்பேற்றிருந்த போது சுற்று வட்டாரப் பகுதியில் ஒருவித கலாச்சாரம் நிலவி வந்தது. அதாவது,  மாணவர்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கூத்தாடச் செல்வாராம்.  அவ்வாறு செல்வதால் அவ்வினத்தில் சீர்வரிசை எனப் பல கிடைத்ததாம்.  இதனால், பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு குறைந்திருந்தது.  அப்போது நம் தலைமையாசிரியர் திரு. கதிரேசன் அவர்கள் தலையிட்டு சுற்று வட்டார ஊர்ப் பிரமுகர்களை அணுகிக் கலந்துரையாடிக் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் விளைவாக அம்மக்கள் வழக்கமாகப் பிப்ரவரி மாதம் நடைபெறும் உள்ளூர்த் திருவிழாவை  ஏப்ரல் மாதம் மாற்றி அமைத்தனர்.  இம்மாற்றத்தை நிகழ்த்தியது நம் தலைமையாசிரியரின் சாதனைப் பயணத்தில் ஒரு மைல் கல் எனலாம்.


இயக்குனர் பாரதிராஜவுடன் இணைந்த சாதனை: 
        
      மழை நீர்க்கு மரமே ஆதாரம் என அரசு மரம்  நடுதலில் அக்கறை காட்டிவருகிறது. இச்சூழலில் பள்ளிகளில் மரக்  கன்றுகள் பல நடப்பட்டாலும் அவற்றில் உயிர் பிழைத்துத் தழைப்பவை  மிகச் சொற்பமே.  ஆடுகள் மேய்தல்,  மக்களின் அலட்சியம், மிதிபடுதல் போன்றவற்றால் மரக்  கன்றுகள்  தழைப்பதில்லை.  தேனி மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில்  இயக்குனர் பாரதிராஜாவை அணுகித் தம் பள்ளியில் மரம் நடு விழாவில் பங்கேற்க  அழைத்தார்.  இதன் தாக்கமாக, “தெக்கத்தி பொண்ணு “ நாடக நடிகர்களான போஸ், பரந்தாமன், கோடாங்கி, துரைசிங்கம் ஆகிய கதாப் பாத்திரங்களைக் கொண்டு பள்ளி வளாகத்தில் ஐந்நூறு மரக் கன்றுகளை நட்டார்  அம்மரங்கள் உள்ளவரை நம் தலைமையாசிரியரின் சாதனைகளைப் பேசும். 
       இவ்வாறு எண்ணற்ற  சமூகத் தொண்டுகளுடன் கல்வியிலும் சிறப்பான தேர்ச்சி விழுக்காட்டைக் காட்டிடும் நம் தலைமையாசிரியர் திரு. பா. கதிரேசன் அவர்களின் சாதனைப் பயணம் தொடர்கிறது....                         

சனி, 23 நவம்பர், 2013

அரையாண்டுத் தேர்வு டிசம்பர்2013 கால அட்டவணை

அரையாண்டு தேர்வு 10-ஆம் வகுப்பு டிசம்பர் 12 முதலும், பிளஸ் 2 டிசம்பர் 10 முதலும் தொடங்குகிறது
அரையாண்டு தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

பத்தாம் வகுப்பு அட்டவணை

டிசம்பர் 12 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 13 - வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 - திங்கள்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17 - செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்


டிசம்பர் 19 - வியாழக்கிழமை - கணிதம்

டிசம்பர் 20 - வெள்ளிக்கிழமை - அறிவியல்

டிசம்பர் 23 - திங்கள்கிழமை - சமூக அறிவியல்

பிளஸ் 2 அட்டவணை

டிசம்பர் 10 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 11 - புதன்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 - வியாழக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 13 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 - திங்கள்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்டு டயடட்டிக்ஸ், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, விவசாயம், பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (தொழில்பாடம்), நர்சிங் தியரி (பொது)

டிசம்பர் 17 - செவ்வாய்க்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், ஜியோகிராபி

டிசம்பர் 18 - புதன்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், அலுவலக நிர்வாகம், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கை, அலுவலக நிர்வாகம்

டிசம்பர் 19 - வியாழக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லேங்குவேஜ் (தமிழ்), தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 20 - வெள்ளிக்கிழமை- வேதியியல், கணக்குப் பதிவியல்


டிசம்பர் 23 - திங்கள்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்

வெள்ளி, 22 நவம்பர், 2013

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா 2013-2014


இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை புரிந்த வேடசந்தூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. பழனிச்சாமி அவர்களுக்குத் தலைமையாசிரியர் திரு.பா. கதிரேசன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கிறார்.

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளித் தலைமையாசிரியரின் வரவேற்புரை 
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் சிறப்புரை பதினோராம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவிகளுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை  மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்குகிறார்.


வியாழன், 21 நவம்பர், 2013

பள்ளியின் முக்கிய நிகழ்வுகள்

கடந்த ஆண்டு அரசுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பா. கதிரேசன் அவர்கள் பரிசு வழங்குகிறார். அருகில் வேடசந்தூர் தொகுதிச்  சட்டமன்ற உறுப்பினர்  உயர்திரு. பழனிச்சாமி அவர்கள் மற்றும் இலந்தக்கோட்டை ஊராட்சித் தலைவர் திரு.ஏ.மோகன் அவர்கள் ஆகியோர்  உள்ளனர்.

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் விலை இல்லா மடிக் கணினிகளை வேடசந்தூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. பழனிச்சாமி அவர்கள் வழங்குகிறார்.

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,  ஊராட்சித் தலைவர் , மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 19 நவம்பர், 2013

தலைமையாசிரியரின் கல்விப் பணியும் சமூகப்பணியும்


திரு. பா. கதிரேசன், எம்.ஏ., எம்.எட்.,    தலைமையாசிரியர் 
           ஆசிரியப் பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி என்பர். இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஆசிரியர்களின் பணி பரந்து விரிந்து காணப்படுகிறது.  வகுப்பறையில் சென்று பாடம் கற்பிப்பது என்ற அளவில் மட்டுமின்றி மாணவர்களைச்  சமூகமயமாதலில்  தன்னை முழு மனிதனாக ஈடுபடுத்தச் செய்வதும் ஆசிரியர்தம்  பணியாக உள்ளது.  மேலும், அரசு அறிவிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் உடனுக்குடன் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் தேனீக்களாக இருக்க வேண்டியதாகவும் உள்ளது. 
      இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டு தலைமையாசிரியராகப் பணியேற்றுள்ள திரு. பா.கதிரேசன் அவர்களால்  மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட்டுள்ளன. 
     திரு. பா. கதிரேசன் எம்.ஏ., எம்.எட்.., அவர்கள் வரலாற்றுத்துறை ஆசிரியராகப் பணியாற்றி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.  தற்போது மேலும் பதவி உயர்வு பெற்று 03/06/2013 முதல் திண்டுக்கல் மாவட்டம்,  இலந்தக்கோட்டை  அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். 
      நாணயத்தின் இரு பக்கங்கள் போல இவரது கல்விப் பணி ஒருபுறம் என்றால் சமூகப் பணி மறுபுறம் எனலாம் இவர் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போதே “அசரீரி கல்வி மற்றும் சமூக நலச் சங்கம்” எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளார்.
      கிராமப் புறப்  பகுதிகளில் மனிதநேயத்துடன் கல்வி மற்றும் சமூகச் சேவையை அந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார்.  மரம் நடுதல், பாலித்தீன் ஒழிப்பு, இரத்த தானம், கண் தானம், சுகாதாரம், சாலைப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வு, விலங்குகள் வதை தடுப்பு முதலான சமூகப் பணிகளைக் கல்விப் பணியுடன் ஆற்றிவருகிறார்.
   தான் பணியாற்றிய அனைத்துப் பள்ளிகளிலும் நூறு சதவீதத் தேர்ச்சியையும் காட்டிச் சாதனை படைத்துள்ளார். இந்தக் கல்வியாண்டிலும் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நூறு விழுக்காடு பெறுவதில் முழு முயற்சியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார். 

திங்கள், 18 நவம்பர், 2013

குழந்தைகள் தின விழா


                                                                      இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு.வீ.முத்துசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.   இந்த நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர்  திரு.பா.கதிரேசன் அவர்கள் தலைமை தாங்கித் தலைமை உரை ஆற்றினார்.  பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.  மாணவர்கள் பலகுரல் எழுப்புதல், கதை கூறல், குறள்  ஒப்பித்தல் போன்ற தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.  உடற்கல்வி ஆசிரியர் திரு. து. முருகேசன் அவர்கள் நன்றி நவின்றார். 

ஆசிரியர் தினம்    Mrphpah;

fz;fz;l flTshpy;
md;id je;ijf;F gpd;
mtdpaJ Nghw;Wfpd;w
mUik kpF flTsuhk; - Mrphpah;

cz;z czTk; je;J
cLf;f cilAk; je;J - ek;
cly; eyj; jpYk;
cs eyj; jpYk;
mf;fiu nfhz;Nlhh; - ek;
md;id je;ijah;

nrtpf;F ,d;gk; je;J
rpe;ijf;F tpUe; jspj;J - ,g;
Gtpf;Fs; ngUkfdha;
ek;ik Gduikj;J

mwpT [_tpaha; - ,e;j
mfpyk; GfOk; Nkjhtpaha; - ek;ik
ghpkspf;fr; nra;Ak;
ghpRj;jkhd nghw;nfhy;yuhk; - Mrphpah;

cjpu ge;jj;jhy; - ek;kplk;
cwT ghuhl;b
ehis ekf;fptd;
ey;y njhU Jizahthd;
vd;w vjph;ghh;g;gpy; - ek;
md;id je;ijah;

nfhs;sp itf;f ,td; Ntz;Lk; - ehk;
nfhz;lhl ,td; Ntz;Lk;
ms;sp midf;f ,td; Ntz;Lk; - ek;
me;jpk fhyj;jpy; ,td; Ntz;Lk;
vd;w vjph;ghh;g;gpy; - ek;
md;id je;ijah;

Mdhy;

jd;dyk; fUjhJ
ek; eydpy; mf;fiw nfhz;L
vt;tpj cwTkpy;yh vy;NyhhplKk;
vt;tpj vjph;ghh;g;G kpd;;wp
nghJ ey Nehf;FlNd

ahk; ngw;w ,d;gk;
ngWf ,t;itafk;
vd;gjha; - ekf;F
ey;yNjhh; tho;tspj;J
ek;ik cah;;j;jp ghh;f;Fk;
xg;gw;w flTsuhk; - Mrphpah;

ePh; ,d;wp mikahJ cyF
vd;gJk; cz;ik MrhNd
ePh; ,d;wp mikahJ cyF
vd;gJk; cz;ik

ckJ Nrit
vd;nwd;Wk; njhlu
vy;yhk; ty;y ,iwtd;
ey;yUs; Ghpthuhf.

FUNt Jiz mth;f;F
jpUNt ,iz.

 t.Nfhtpe;jrhkp
 ,sepiy cjtpahsh;
 muRNky;epiyg;gs;sp
 ye;jf;Nfhl;il 624620.