வியாழன், 13 நவம்பர், 2014

மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் சாதனைமண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் இலந்தைக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மண்டல அளவிலான பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் சாதனை செய்துள்ளனர். நேற்று 12/11/2/14  புதன் கிழமை திண்டுக்கல், பழனி, தேனி, உத்தமபாளையம் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம், மறவப்பட்டி, புனித குழந்தை இயேசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

     ஏற்கெனவே மாவட்ட அளவில் பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற நம் பள்ளி மாணவர்கள் பிரபாகரன், சபரீஸ்வரன், சிவசங்கர், விஜய், கோபிநாத், விக்ரம், யோகநாதன், பிரசாத் ஆகியோர்  இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

     போட்டியில் வெற்றிபெற்றுப் பெருமை தேடித் தந்த மாணவர்களைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கமூட்டினார்.  மாணவர்களை விளையாட்டுக்குச் சிறப்பாகப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் அவர்களையும் பாராட்டினார்.  அனைத்து ஆசிரியர்களும் சாதனை மாணவர்களைப் பாராட்டினர்.   

ஞாயிறு, 2 நவம்பர், 2014

புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு


          திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி  அவர்கள் பணியிட மாறுதலில் தாழையூத்து அரசு மேனிலைப் பள்ளிக்குச் சென்றார். 31.10.2014 வெள்ளிக்கிழமை பணிவிடுப்பு செய்யப்பட்டார். அவர் மென்மேலும் பதவி உயர்வுகள் பெற்றுக் கல்வித்துறையில் வலம்வர  வாழ்த்துகிறோம்.

                 அதே நாளில்   திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய  திரு அ . வடிவேல் என்பார் பதவி உயர்வு பெற்று  நம் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பணி ஏற்றுள்ளார். அவர் தலைமையில் பள்ளியில் கற்றல் கற்பித்தல் மேம்பாடு அடைந்து சிறப்படைய மனமார வாழ்த்துகிறோம்.