புறநானூறு
1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் ?
புறநானூறு
2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது ? எட்டுத்தொகை
3. இப்பாடலை இயற்றியவர் யார்? கண்ணகனார்
4. துகிர் என்பதன் பொருள் யாது?
பவளம்
5. தொடை என்பதன் பொருள் யாது ? மாலை
6. கலம் என்பதன் பொருள் யாது? அணிகலன்
7. இப்பாடலில் இடம்பெறும் அணி யாது? உவமை அணி
8. ‘பொன்னும் துகிரும் முத்தும்’ இலக்கணக் குறிப்பு ? எண்ணும்மை
9. மாமலை இலக்கணக் குறிப்பு ?
உரிச்சொல் தொடர்
10. அருவிலை, நன்கலம் – இலக்கணக் குறிப்பு? பண்புத்தொகை
11. புணர்ந்து – பகுபதம் பிரிக்க. புணர்+த்(ந்)+த்+உ
12. அருவிலை – பிரிக்க. அருமை + விலை
13. நன்கலம் – பிரிக்க. நன்மை + கலம்
14. இப்பாடலில் இடம்பெறும் சீர்மோனைகள் – அருவிலை – அமைக்கும், மாமலை –
மணியும்
15. பாடலில் இடம் பெரும் சீர் எதுகைகள் – பொன்னும் – மன்னிய, மாமலை –
காமரு, இடைப்பட – தொடை புணர்ந்து
16. பாடலில் இடம்பெறும் அடி எதுகைகள் – அருவிலை, ஒருவழி
17. பாடலில் இடம்பெறும் அடி மோனை – சான்றோர், சாலார்
நற்றிணை
1. இப்பாடல் வரிகள்
இடம்பெற்ற நூல் எது? நற்றிணை
இப்பாடல் இடம்பெற்ற
நூல் எத்தொகுப்பில் உள்ளது? எட்டுத்தொகை
இந்நூலைத்
தொகுப்பித்தவர் யார்? பன்னாடு தந்த மாறன் வழுதி
இந்நூலில் உள்ள
பாடல்களின் எண்ணிக்கை? 400
இந்நூல் பாடல்களைப்
பாடிய புலவர்கள் எத்தனை பேர் ? 275
இப்பாடலின் கூற்று
யாது? தோழி தலைவனிடம் கூறியது
இப்பாடல் அமைந்த
நூலின் பா அடி வரையறை? 9 - 12
‘அரி’ எனும் சொல்லின் பொருள் யாது?
நெற்கதிர்
அங்கண் – பிரித்தெழுதுக அம்
+ கண்
அகல்வயல் – இலக்கணக் குறிப்பு?
வினைத்தொகை
செறு என்பதன் பொருள் ? வயல்
வட்டி என்பதன் பொருள்?
பனையோலைப் பெட்டி
யாணர் என்பதன் பொருள்? புதுவருவாய்
புன்கண் – பிரித்தெழுதுக
புன்மை + கண்
மென்கண் – பிரித்தெழுதுக மென்மை+கண்
புன்கண், மென்கண் – இலக்கணக் குறிப்பு ? பண்புத்தொகை
செய்வினை – இலக்கணக் குறிப்பு
? வினைத்தொகை
பாடலில் அமையும் சீர்மோனைகள்: அரிகால் – அங்கண் – அகல்வயல்
பாடலில் அமையும் சீர்எதுகைகள்: மறுகால் – செறுவின்,நெடிய-கடிய
பாடலில் அமையும் அடிஎதுகைகள்: சான்றோர்,புன்கண்,மென்கண்
இப்பாடல் இயற்றிய புலவர் ? மிளைகிழான் நல்வேட்டனார்
தமிழ் விடு தூது
1. இப்பாடல் இடம்பெற்ற நூல் எது? தமிழ்விடு தூது
2. இப்பாடல் வரிகள் படைத்த புலவர் யார்? பெயர் அறியப்படவில்லை
3. இந்நூல் இத்தொகுப்பில் உள்ளது? 96 வகைச்
சிற்றிலக்கியங்கள்
4. அரியாசனம் என்பது யாது?
சிம்மாசனம்
5. ஏர் என்பதன் பொருள் யாது? அழகு
6. வரம்பு என்பதன் பொருள் யாது? வரப்பு
7. சீத்தையர் என்போர் யார்? போலிப் புலவர்கள்
8. நாளிகேரம் என்பதன் பொருள் யாது? தென்னை
9. செவியறுத்து – இலக்கணக் குறிப்பு ? இரண்டாம் வேற்றுமைத் தொகை
10. பிரிக்க. நாற்கரணம் = நான்கு
+ கரணம்
11. கரணத்தேர் = கரணத்து + ஏர்
12. நாற்பொருள் = நான்கு + பொருள்
13. செவியறுத்து = செவி + அறுத்து
14. இளங்கனி = இளமை + கனி
15. விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு
16. உன்னோடுவந்துரைக்கும் = உன்னோடு + உவந்து + உரைக்கும்
17. செய்யுளுக்கு வரப்புகள் ?
நான்கு பாக்கள் ( வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா )
18. நீர் மடைகள் எவை? பா இனங்கள் – துறை, தாழிசை, விருத்தம்
19. ஏர்கள் எவை? மனம், சித்தம்,
புத்தி, அகங்காரம் என்ற நாற்கரணங்கள்
20. உழவர்கள் யார் ? புலவர்கள்
21. விதைகள் எவை ? வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய நான்கு நெறி
22. வயலின் விளைவுகள் யாவை? அறம், பொருள், இன்பம், வீடு
23. வயலின் களைகள் யார் ? போலிப்புலவர்கள்
24. போலிப் புலவர்களின் தலையில் குட்டுபவர் – அதிவீரராம பாண்டியன்
25. போலிப் புலவர்களின் தலை வெட்டுபவர் -
ஓட்டக் கூத்தர்
26. போலிப் புலவர்களின் செவி அறுப்பவர்
- வில்லிபுத்தூரார்
27. விரித்தெழுதுக . முத்தமிழ் –
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
28. பிரிக்க . பாவினம் = பா + இனம்
29. இளங்கனி, முத்தமிழ், நல்லேர் – இலக்கணக் குறிப்பு ? பண்புத்தொகை
30. நனி விதைத்து – இலக்கணக் குறிப்பு ? உரிச்சொல் தொடர்
31. பால்முந்திரிகைவாழை – இலக்கணக் குறிப்பு ? உம்மைத் தொகை
கலித்தொகை
இப்பாடல் வரிகள்
இடம்பெற்ற நூல் எது? கலித்தொகை
இப்பாடலின் நூல்
இடம்பெற்ற தொகுப்பு யாது? எட்டுத்தொகை
இந்நூலைத் தொகுத்தவர்
யார்? நல்லந்துவனார்
இப்பாடலைப் பாடியவர்
யார்? நல்லந்துவனார்
இந்நூலில் உள்ள
மொத்தப் பாடல்கள் எத்தனை? நூற்றைம்பது
இந்நூலை எப்படிப்
புகழ்வர்? கற்றறிந்தார் ஏத்தும் கலி
ஆற்றுதல் என்பது
யாது? இல் வாழ்வென்பது வருந்திவந்தோர்க்கு
உதவுதல்
போற்றுதல் என்பது ?
பாதுகாப்பாவது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
பண்பு என்பது? பண்பாவது சான்றோர் வழியில் நடத்தல்
அன்பு என்பது? அன்பாவது சுற்றம் தழுவி வாழ்தல்
அறிவு என்பது? அறிவாவது அறிவிலார் சொல் பொறுத்தல்
செறிவு என்பது? செறிவாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல்
நிறை என்பது? நிறை என்பது பிறர் அறியாது ரகசியம் காத்தல்
முறை என்பது? நீதி முறையாவது ஒருபால் கோடாது தண்டித்தல்
பொறை என்பது?
போருமையாவது இகழ்வாரையும் பொறுத்தல்
இலக்கணக் குறிப்பு
தருக: ஒழுகுதல், நோன்றல், பொறுத்தல் –
தொழிற்பெயர்
நந்திக்கலம்பகம், நாலாயிரத்திவ்யப் பிரபந்தம், நிற்க நேரமில்லை
நந்திக் கலம்பகம்
இப்பாடல் வரிகள் இடம்
பெற்ற நூல் எது? நந்திக்கலம்பகம்
இந்நூலை இயற்றியவர்
யார்? பெயர் அறியப்படவில்லை
இந்நூல்
எத்தொகுப்பில் உள்ளது? சிற்றிலக்கிய வகை
இந்நூலின் காலம்
யாது? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
இந்நூலின் பாட்டுடைத்
தலைவன் யார்? மூன்றாம் நந்திவர்மன்
இப்பாடலால்
அறியப்படும் செய்தி யாது? நந்திவர்மனின் வீரம்
பொருள் எழுதுக: பதி =
ஊர் , புயல் = மழை , பணை = மூங்கில்
புனல் = நீர் , நிதி = செல்வம் , கவிகை = குடை
இலக்கணக் குறிப்புத்தருக:
பொழிதருமணி, வருபுனல், நிதிதரு கவிகை
= வினைத்தொகை
நிலமகள், மலரடி = உருவகம்
இவையிவை = அடுக்குத்
தொடர்
பாடலில் எதுகையும் மோனையும் இடம் பெற்றுள்ளன. கண்டுகொள்க
நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தம்
இப்பாடல் வரிகள் இடம்
பெற்ற நூல் எது? பெருமாள் திருமொழி
இப்பாடல் வரிகளை
இயற்றியவர் யார்? குலசேகர ஆழ்வார்
இப்பாடல் வர்கள்
இத்தொகுப்பில் உள்ளது ? முதல் ஆயிரம்,
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
குலசேகராழ்வார் எந்த
நாட்டைச் சேர்ந்தவர்? சேர நாடு,
திருவஞ்சைக் களம்
இந்நூல் எச்சமயத்தைப்
பின்பற்றியுள்ளது? வைணவம்
இப்பாடலில்
குறிப்பிடப்படும் இறைவன் யார்? வித்துவக்கோடு திருமால்
பொருள் தருக: தார் = மாலை
இலக்கணக்
குறிப்புத்தருக: நீள்வயல் = வினைத்தொகை
, வாழும் குடி = பெயரெச்சம்
சீர்மோனைகள்:
பானோக்கா –
பற்றல்லால், பற்றில்லேன் , தானோக்கா –
தார்வேந்தன் , கோனோக்கி – குடிபோன்று
அடிஎதுகை: மீன் நோக்கு – பானோக்கா,
தானோக்கா - கோன் நோக்கி
நிற்க
நேரமில்லை
இப்பாடல் வரிகளை
இயற்றியவர் யார்? சாலை இளந்திரையனார்
இப்பாடல் வரிகள்
எத்தொகுப்பில் உள்ளது? பூத்தது மானுடம் எனும் கவிதைத் தொகுப்பில்
இவ்வாசிரியரின் பிற
படைப்புகள் யாவை? புரட்சி முழக்கம், உரைவீச்சு
இளைப்பாறுதல் என்றால்
என்ன? ஓய்வெடுத்தல்
இலக்கணக்
குறிப்புத்தருக: சாதனைப் பூக்கள் = உருவகம் , கல்லும் மழையும் = எண்ணும்மை
பொருள் தருக: செத்தை = குப்பைக் கூளம்
நெஞ்சில் தேன் வந்து
பாயும் – எப்போது? பணியை முடித்து ஓய்வு
பெற்றால் நெஞ்சில் தேன் போன்ற இனிய செய்திகள் வந்து குவியும்.
பாடலில் எதுகை
மோனைகள் உள்ளன. அவற்றைக் கண்டு கொள்க;
__________________________________________________________________________________________________
தொகுப்பு:
கே.எஸ். கோபிநாத், எம்.ஏ., பி.எட்.,
பட்டதாரி ஆசிரியர்[ தமிழ்]
அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை ,
திண்டுக்கல் மாவட்டம்.
கே.எஸ். கோபிநாத், எம்.ஏ., பி.எட்.,
பட்டதாரி ஆசிரியர்[ தமிழ்]
அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை ,
திண்டுக்கல் மாவட்டம்.
ARUMAI
பதிலளிநீக்கு(நற்றிணை) சென்றவட்டி என்பதன் இலக்கணக் குறிப்பு யாது? விடை: பெயரெச்சம்
பதிலளிநீக்குஆசிரியர் திரு.கோபிநாத் அவருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுனைவர் ரா.லட்சுமணசிங், தமிழாய்வுத்துறைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, கரூர்
ஆசிரியர் திரு.கோபிநாத் அவருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுனைவர் ரா.லட்சுமணசிங், தமிழாய்வுத்துறைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, கரூர்
முத்தமிழ் விரித்தெழுதுக, பிரித்தெழுதுக.
பதிலளிநீக்குமுத்தமிழ் விரித்தெழுதுக, பிரித்தெழுதுக.
பதிலளிநீக்கு