இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 19 நவம்பர், 2013

தலைமையாசிரியரின் கல்விப் பணியும் சமூகப்பணியும்


திரு. பா. கதிரேசன், எம்.ஏ., எம்.எட்.,    தலைமையாசிரியர் 
           ஆசிரியப் பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி என்பர். இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஆசிரியர்களின் பணி பரந்து விரிந்து காணப்படுகிறது.  வகுப்பறையில் சென்று பாடம் கற்பிப்பது என்ற அளவில் மட்டுமின்றி மாணவர்களைச்  சமூகமயமாதலில்  தன்னை முழு மனிதனாக ஈடுபடுத்தச் செய்வதும் ஆசிரியர்தம்  பணியாக உள்ளது.  மேலும், அரசு அறிவிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் உடனுக்குடன் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் தேனீக்களாக இருக்க வேண்டியதாகவும் உள்ளது. 
      இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டு தலைமையாசிரியராகப் பணியேற்றுள்ள திரு. பா.கதிரேசன் அவர்களால்  மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட்டுள்ளன. 
     திரு. பா. கதிரேசன் எம்.ஏ., எம்.எட்.., அவர்கள் வரலாற்றுத்துறை ஆசிரியராகப் பணியாற்றி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.  தற்போது மேலும் பதவி உயர்வு பெற்று 03/06/2013 முதல் திண்டுக்கல் மாவட்டம்,  இலந்தக்கோட்டை  அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். 
      நாணயத்தின் இரு பக்கங்கள் போல இவரது கல்விப் பணி ஒருபுறம் என்றால் சமூகப் பணி மறுபுறம் எனலாம் இவர் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போதே “அசரீரி கல்வி மற்றும் சமூக நலச் சங்கம்” எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளார்.
      கிராமப் புறப்  பகுதிகளில் மனிதநேயத்துடன் கல்வி மற்றும் சமூகச் சேவையை அந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார்.  மரம் நடுதல், பாலித்தீன் ஒழிப்பு, இரத்த தானம், கண் தானம், சுகாதாரம், சாலைப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வு, விலங்குகள் வதை தடுப்பு முதலான சமூகப் பணிகளைக் கல்விப் பணியுடன் ஆற்றிவருகிறார்.
   தான் பணியாற்றிய அனைத்துப் பள்ளிகளிலும் நூறு சதவீதத் தேர்ச்சியையும் காட்டிச் சாதனை படைத்துள்ளார். இந்தக் கல்வியாண்டிலும் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நூறு விழுக்காடு பெறுவதில் முழு முயற்சியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக