இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

சுதந்திரதின விழா நிகழ்வுகள்


சுதந்திரதின விழா நிகழ்வுகள்

           நாட்டின் ஆவது சுதந்திரதின விழா நம் பள்ளியில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.க.செ. அருள்ஜோதி அவர்களின் தலைமையில் இலந்தக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் திரு ஆ. மோகன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்தார்.  விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.வெங்கட்ராமன், பொருளாளர் திரு. ராமமூர்த்தி, கிராமக்கல்விக் குழுத் தலைவர் திரு.திருவேங்கடம், கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

           மேலும், இவ்விழாவில் ஊரில் இயங்கிவரும் அபிநயா நினைவு கல்வி அறக்கட்டளை, இளைய பாரதம் நற்பணி மன்றம், தமிழிசை நண்பர்கள் குழு ஆகியவற்றின் சார்பாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.  மாணவர்களின் உரைவீச்சு, கவியரங்கம், கலைநிகழ்ச்சி முதலியவற்றால் விழா மேலும் மெருகேறியது.  பள்ளியின் தமிழாசிரியர் திரு. கொ. சுப. கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.  

புதன், 16 ஜூலை, 2014

கல்வி வளர்ச்சி நாள் விழா 2014

   
     
                                     கல்வி வளர்ச்சி நாள் விழா - 2014

          திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் நேற்று கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கு என மூன்று நிலைகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.  மாலை மூன்று மணி அளவில்   கல்வி வளர்ச்சி நாள் விழாவுடன் இந்தக் கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

         இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் திரு கொ.சுப. கோபிநாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  தலைமையாசிரியர் காமராசரின் நற்குணங்கள், கல்விப்பணிகள், அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உண்மைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். முதுகலை ஆசிரியர் திருமதி.கோ.பாரதமணி அவர்கள் “தமிழ் இலக்கியங்களும் வாழ்வியலும்” எனும் தலைப்பில் இலக்கியமன்ற விழா உரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் இரா.கோகுல் மற்றும் ம.கவிதா ஆகியோர்  உரைவீச்சு சிறப்பாக அமைந்தது. திங்கட்கிழமை தோறும் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வு மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. விழாவின் நிறைவாகத் தமிழாசிரியர் திருமதி.இரா.துர்கா தேவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.