சுதந்திரதின விழா நிகழ்வுகள்
நாட்டின்
ஆவது சுதந்திரதின விழா நம் பள்ளியில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.க.செ.
அருள்ஜோதி அவர்களின் தலைமையில் இலந்தக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் திரு ஆ. மோகன்
அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்தார்.
விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.வெங்கட்ராமன்,
பொருளாளர் திரு. ராமமூர்த்தி, கிராமக்கல்விக் குழுத் தலைவர் திரு.திருவேங்கடம்,
கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை
வழங்கினர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை,
பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெற்றவர்களுக்குப்
பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும்,
இவ்விழாவில் ஊரில் இயங்கிவரும் அபிநயா நினைவு கல்வி அறக்கட்டளை, இளைய பாரதம்
நற்பணி மன்றம், தமிழிசை நண்பர்கள் குழு ஆகியவற்றின் சார்பாகக் கடந்த ஆண்டு
நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று
இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மாணவர்களின் உரைவீச்சு, கவியரங்கம்,
கலைநிகழ்ச்சி முதலியவற்றால் விழா மேலும் மெருகேறியது. பள்ளியின் தமிழாசிரியர் திரு. கொ. சுப.
கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு
பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக