கல்வி வளர்ச்சி நாள் விழா - 2014
திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை
அரசு மேனிலைப் பள்ளியில் நேற்று கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி
நாளாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு
மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. ஆறு முதல் எட்டாம்
வகுப்பு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கு என மூன்று
நிலைகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாலை மூன்று மணி அளவில் கல்வி வளர்ச்சி நாள் விழாவுடன் இந்தக் கல்வி
ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா என
முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில்
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் தலைமை தாங்கினார்.
தமிழாசிரியர் திரு கொ.சுப. கோபிநாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தலைமையாசிரியர் காமராசரின் நற்குணங்கள்,
கல்விப்பணிகள், அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உண்மைகளைப் பட்டியலிட்டுப்
பேசினார். முதுகலை ஆசிரியர் திருமதி.கோ.பாரதமணி அவர்கள் “தமிழ் இலக்கியங்களும்
வாழ்வியலும்” எனும் தலைப்பில் இலக்கியமன்ற விழா உரையாற்றினார். போட்டிகளில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் இரா.கோகுல் மற்றும்
ம.கவிதா ஆகியோர் உரைவீச்சு சிறப்பாக
அமைந்தது. திங்கட்கிழமை தோறும் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வு மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
விழாவின் நிறைவாகத் தமிழாசிரியர் திருமதி.இரா.துர்கா தேவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
பதிலளிநீக்குவணக்கம்!
இன்றுதான் உங்கள் இனிய வலை..கண்டேன்!
நன்றுதான் என்று நவில்கின்றேன்! - என்றும்நாம்
அன்னைத் தமிழ்ப்பணியில் ஆழ்ந்து களித்திடுவோம்!
முன்னை மரபுநம் முச்சு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு