இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

புதன், 16 ஜூலை, 2014

கல்வி வளர்ச்சி நாள் விழா 2014

   
     
                                     கல்வி வளர்ச்சி நாள் விழா - 2014

          திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் நேற்று கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கு என மூன்று நிலைகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.  மாலை மூன்று மணி அளவில்   கல்வி வளர்ச்சி நாள் விழாவுடன் இந்தக் கல்வி ஆண்டிற்கான தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

         இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் திரு கொ.சுப. கோபிநாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  தலைமையாசிரியர் காமராசரின் நற்குணங்கள், கல்விப்பணிகள், அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உண்மைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். முதுகலை ஆசிரியர் திருமதி.கோ.பாரதமணி அவர்கள் “தமிழ் இலக்கியங்களும் வாழ்வியலும்” எனும் தலைப்பில் இலக்கியமன்ற விழா உரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் இரா.கோகுல் மற்றும் ம.கவிதா ஆகியோர்  உரைவீச்சு சிறப்பாக அமைந்தது. திங்கட்கிழமை தோறும் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வு மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. விழாவின் நிறைவாகத் தமிழாசிரியர் திருமதி.இரா.துர்கா தேவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. 

திங்கள், 23 ஜூன், 2014

மாணவர்களுக்குப் பாராட்டு விழா

        அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை
    10,12-ஆம் வகுப்புச் சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு விழா
  நாள்: 24-6-2014 செவ்வாய்க் கிழமை               நேரம்:  முற்பகல் 11 மணி
                               நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:       திரு.வீ.முத்துசாமி அவர்கள், முதுகலை ஆசிரியர்
தலைமை:          திருமதி.க.செ.அருள் ஜோதி அவர்கள், தலைமை ஆசிரியர்
முன்னிலை :       திரு.ஆ.மோகன் அவர்கள்,  ஊராட்சித்தலைவர்,
                    இலந்தக்கோட்டை
பரிசுகள் வழங்கிச்
சிறப்புரை :       மாண்புமிகு எஸ். பழனிச்சாமி அவர்கள்,
                   வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
வாழ்த்துரைதிருமதி. நாகம்மாள் அவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்
              திரு.கண்ணன் அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
              திருமதி.காஞ்சனா பாண்டியன் அவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்
              திரு.வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
              திரு.ராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்
              திரு. திருவேங்கடம் அவர்கள், கிராமக் கல்விக் குழுத் தலைவர்
              திரு. நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
              திரு. சுப.ரெங்கசாமி அவர்கள், மேனாள் பெ.ஆ.க.தலைவர்
                       மற்றும் உள்ளூர்ப் பெருமக்கள்

நன்றியுரை:  திருமதி.இரா.துர்கா தேவி அவர்கள், தமிழாசிரியர்
தொகுப்புரை: திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண் 



2014-2015 புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு

                 நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் இந்தக் கல்வி
ஆண்டில்  திருமதி.க.செ.அருள்ஜோதி அவர்கள் தலைமையாசிரியராக 
20-6-2014 அன்று பொறுப்பேற்றார்.  இவர் பழனி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் மனையியல் பிரிவில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது பணிகள் சிறப்படைய வாழ்த்துகள்.