இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

சுதந்திர நாள் விழா அறிக்கை


சுதந்திர நாள் விழா அறிக்கை 
       
                       இலந்தகோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பள்ளியின்  தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் அவர்கள் தலைமைதாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. ந. திருவேங்கடம், பொருளாளர் திரு. இராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ.மோகன், ஊரார் திரு. சீத்தாராமன், கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு. வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். முதலில் பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.   பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி. ப.கோ.பாரதமணி, திரு.து. கரிகாலன் ஆகியோர் காந்தியம் மற்றும் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்துப் பேசினார். சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை குறித்து மாணவிகள் செல்வி. சசிரேகா, செல்வி. ஷாலினி ஆகியோர் பேசினார்.

                   இந்த விழாவில் கடந்த அரசு பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளுடன் ரொக்கப் பரிசுகளும் ஆசிரியர்கள் திருமதி.ந.ஜெயா, திருமதி. ப.கோ.பாரதமணி, திருமதி.இல.கோகிலா, திரு. மா.முருகன் ஆகியோர் வழங்கிப் பாராட்டினர். மேலும், சுதந்திர நாள் முன்னிட்டு நடத்தப்பெற்ற கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் வில்லுப்பாட்டு, நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாயின.
இலந்தகோட்டை கிராமத்தின் சிறகுகள் இயக்கம் சார்பாகக் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தமிழாசிரியர் திரு. கொ.சுப. கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரையுடன் நன்றியுரை ஆற்றினார்.  நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக