மன்ற
நிகழ்வுகள்
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்
பள்ளியில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மன்றக் கூட்டம் தொடங்கியது. வியாழக் கிழமை தமிழ் இலக்கிய மன்றம் மற்றும்
சமூக அறிவியல் மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த இரு மன்ற நிகழ்வுகளுக்கும் பள்ளியின்
தலைமையாசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரை
ஆற்றினார். தமிழிலக்கிய மன்றத்தின்
பொறுப்பாசிரியர் திரு. கோபிநாத் அவர்களும், சமுக அறிவியல் மன்றத்தின்
பொறுப்பாசிரியர் திரு. கரிகாலன் அவர்களும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.
தமிழிலக்கிய மன்றக் கூட்டத்தில் மொழித்திறன் சார்ந்த சொற்கோபுரம் அமைத்தல், சொற்சங்கிலி
அமைத்தல், தானே தலைப்பெடுத்துப் பேசுதல் முதலிய போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்ற
மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
![]() |
சொற்கோபுரம் அமைக்கும் போட்டியில் முதன்மை பெற்ற மாணவி க. ரோஷ்ணிக்குத் தலைமையாசிரியர் பரிசு வழங்குகிறார். |
![]() |
சொற்சங்கிலி அமைக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி ச. யுவ ஸ்ரீக்குத் தலைமையாசிரியர் பரிசு வழங்குகிறார். |
![]() |
சமுக அறிவியல் மன்றக் கூட்டத்தில் ஆசிரியர் திரு. து. கரிகாலன் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு பற்றி உரையாற்றுகிறார். |
![]() |
மன்ற நிகழ்வுகளுக்குத் தமிழாசிரியர் திரு. கோபிநாத் அவர்கள் நன்றி நவில்கிறார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக