அரசு
மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
பாரத
ரத்னா அப்துல்கலாம் நினைவு நாள் –
இளைஞர் எழுச்சி நாள் விழா - 27/07/2017
அறிக்கை
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில்
இன்று 27/07/2017 மாலை 3.00 மணியளவில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா
அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் – இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இந்த
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் தலைமை வகித்தார்.
பள்ளியின் மூத்த முதுகலையாசிரியர் திரு. வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அப்துல்கலாம் இந்தியாவின் தென்கோடியில் பிறந்து,
வடகோடியில் மறைந்தவர். அவர் தமிழ்வழியில் கல்வியைத் தொடர்ந்து, அறிவியலில் சிறந்து,
அணுசக்தித் துறையில் நிகரற்று விளங்கி, அக்னி ஏவுகணை மூலம் உலக அரங்கில் இந்தியாவைத்
தலை நிமிர வைத்தவர். இளைஞர்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தவர். இளைய இந்தியாவைக்
கனவு காண வைத்த வல்லவர். அவர் பொன்மொழிகளை உறுதி மொழிகளாக நாம் ஏற்று வளமான நாட்டை
உருவாக்க வேண்டும் எனத் தலைமையாசிரியர் தனது தலைமை உரையில் தெரிவித்தார். மாணவி சசிரேகா
மற்றும் காவியா ஆகியோர் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறுபற்றிப் பேசினர். முன்னதாக,
நினைவு நாள் சார்பாக பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் இரு நிலைகளில்
நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியர்
திரு. கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரை ஆற்றினார். முதுகலைத் தமிழாசிரியர் திருமதி.ப.கோ.
பாரதமணி அவர்கள் நன்றியுரை நல்கினார்.
பாரத
ரத்னா அப்துல்கலாம் நினைவு நாள் –
இளைஞர் எழுச்சி நாள் விழா - 27/07/2017
போட்டிகள் விவரம்
6-8 நிலை
கட்டுரைப்
போட்டி
முதல்
பரிசு - வை. பிரியதர்ஷினி – 7 அ
இரண்டாம்
பரிசு - ஆ. காளீஸ்வரன் – 8 அ
மூன்றாம்
பரிசு - பி. மகரஜோதி – 6 அ
பேச்சுப்
போட்டி
முதல்
பரிசு - க. ரோஷ்னி – 8 அ
இரண்டாம்
பரிசு - நா. நவநீதகிருஷ்ணன் – 7 ஆ
மூன்றாம்
பரிசு - செ. புவனேஸ்வரி – 6 அ
ஓவியப்
போட்டி
முதல்
பரிசு - வி. அபினேஷ் – 8 அ
இரண்டாம்
பரிசு - ச. பாலமுருகன் – 6 ஆ
மூன்றாம்
பரிசு - க. ஜோதி – 8 ஆ
9-12
நிலை
கட்டுரைப்
போட்டி
முதல்
பரிசு - ச. மகிளாதேவி – 11 ஆ
இரண்டாம்
பரிசு - ம. காவியா – 9 அ
மூன்றாம்
பரிசு - க. காளீஸ்வரி – 10 ஆ
பேச்சுப்
போட்டி
முதல்
பரிசு - ச. மகிளாதேவி – 11 ஆ
இரண்டாம்
பரிசு - ம. சசிரேகா – 11ஆ
மூன்றாம்
பரிசு - தி. தீபிகா - 10 அ
ஓவியப்
போட்டி
முதல்
பரிசு - ரெ. கிரிஜோதீஸ்வரி – 12 ஆ
இரண்டாம்
பரிசு - ரெ. மகேஸ்குமார் – 10 அ
மூன்றாம்
பரிசு - மு. அஞ்சுகா – 11 ஆ


































































