பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் - ஜூலை 2015
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் நேற்று 13/7/2015 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ. வடிவேல் அவர்கள் தலைமை ஏற்றார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ.மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. வெங்கட்ராமன், பொருளாளர் திரு.ராமமூர்த்தி, கிராம கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம் ஆகியோர் சிறப்பு வகித்தனர்.
இந்த நிகழ்வில் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர் 160 பேர் பங்கேற்றனர். மாணவர்களின் கல்வித் தரம், பள்ளியின் சுற்றுச் சூழல், சுகாதாரம் முதலியன கூட்டப் பொருள்களாக அமைந்தன. பள்ளியில் மேம்படுத்தப் பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப் பட்டன. பள்ளியில் தற்போது துப்புரவுப் பணியாளர், இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஒருவரை நியமனம் செய்வது எனவும் அதற்கான நிதிப் பொறுப்பைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்பது எனவும் முடிவு எடுக்கப் பட்டது. மேலும் கடந்த ஆண்டில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப் பட்டனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் துப்புரவுப் பணியாளர் நியமனம் செய்தமைக்கு அனைத்து ஆசிரியர்களின் சார்பிலும் நன்றி தெரிவிக்கப் பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக