இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 15 அக்டோபர், 2018

பாரத ரத்னா அப்துல்கலாம் பிறந்த நாள்-மாணவர் எழுச்சி நாள்

            இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா மேதகு அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மாணவர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவர்களிடையே நடத்தப்பெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இவ்விழாவில் மாணவி மகிளா தேவியின் உரைவீச்சு இடம்பெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. பீட்டர் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.














பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம்


              இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்து விளையாட்டு போட்டியில் பழனி மாவட்ட அளவில் கலந்துகொண்டு சாதனை புரிந்துள்ளனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான அதே விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு பள்ளி காலையில் வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமையாசிரியர் திருமதி. பீட்டர் அவர்கள் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். மாணவர்களை நெறிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் திரு. நெல்சன் ராஜ் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.