அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை
குடியரசு தின விழா- 2015
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நாள்: 26/01/2015 திங்கட்கிழமை
நேரம்: காலை 9 மணி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
தேசியக் கொடி ஏற்றுதல்
கொடி வணக்கப்பாடல்
உறுதி மொழி
வரவேற்புரை: திரு.வெ.பாலகிருஷ்ணன்அவர்கள்,முதுகலை ஆசிரியர்
தலைமை&தலைமை உரை:
திரு.அ. வடிவேல் அவர்கள், தலைமைஆசிரியர்
முன்னிலை :
திரு.ஆ.மோகன்
அவர்கள், ஊராட்சித்தலைவர், இலந்தக்கோட்டை
வாழ்த்துரை: திரு.திருவேங்கடம்அவர்கள்,கிராமக்
கல்விக் குழுத் தலைவர்
திரு. வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
திரு. இராமமூர்த்தி அவர்கள் , பெ.ஆ.க. பொருளர்
திரு.நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
திரு.சுப.ரெங்கசாமி அவர்கள், முன்னாள் பெ.ஆ.க.தலைவர்
திரு.து. முருகேசன் அவர்கள், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்
மாணவர் உரை
பரிசுகள் வழங்குதல்
கவிதை வாசித்தல்: திரு.வ.கோவிந்தசாமி அவர்கள், இளநிலை உதவியாளர்
தேசியப் பாடல்கள் பாடுதல்
கலை நிகழ்ச்சி
நன்றியுரை: திருமதி.ஜெ.காந்திமதி அவர்கள், பட்டதாரி
ஆசிரியர்
தொகுப்புரை: திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண்
குடியரசு தினவிழா நிகழ்வுகள்
இலந்தக்கோட்டை அரசு
மேனிலைப் பள்ளியில் குடியரசு தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. காலை 9
மணி அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர்
திரு.அ.வடிவேல் அவர்கள் தலைமை தாங்கிக்
குடியரசு தினச் சிறப்புரை ஆற்றினார். இலந்தக் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர்
திரு.மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். விழாவிற்கு ஒட்டன்சத்திரம் இயற்கை வேளாண்
அமைப்பின் நிறுவனர் திரு. இளந்திரையன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து
கொண்டார். இந்த நிகழ்வில் இருபது மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. குடியரசு தின விழாக் கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் இளநிலை உதவியாளர் திரு. கோவிந்தசாமி அவர்கள் குடியரசு தினக் கவிதை
வாசித்தார். பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், கட்டடக்
குழுத் தலைவர் திரு. நம்பெருமாள், ஊரார்
திரு சீத்தா ராமன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. து. முருகேசன் ஆகியோர்
கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். தமிழாசிரியர்
திரு கோபிநாத் அவர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார். நாட்டுப் பண்ணுடன் விழா
இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக