பாரத மணித்திரு நாடு – இது
பார் புகழ் தனித்திரு நாடு –
இது
வீரம் விளைந்த நல்நாடு – இதன்
விடுதலையைக் கொண்டாடு
ஆயிரம்
சாதிகள் உண்டு – ஆயினும்
அனைவரும்
ஒன்று – மனித
நேயமும்
நிறையவே உண்டு – இங்கு
நீதியும்
நேர்மையும் உண்டு
மதங்களும் பலப் பல உண்டு – மனு
சாத்திரம் அதனிலும் உண்டு –
இங்கு
விதவித மொழிகளும் உண்டு – இதில்
வித்தகம் நிறையவே உண்டு
இயற்கையின் வளங்களும் ஏராளம் –
இதில்
எழில்மிகு தளங்களும் தாராளம் –
இங்கு
செயற்கை வளங்களும் பல உண்டு –
இதன்
சிறப்பினை வெள்ளையன் கண்டு
வாணிகம் செய்யவே வந்தான் – இதன்
வளமையைக் கண்டிவன் வியந்தான் – இது
பேணிட வேண்டிய செல்வம் – என்ற
பெருமையை அவன் உடன் உணர்ந்தான்
தந்திர மாகவே பேசி – நம்
மன்னர்கள் மனத்தினை மாற்றி – நம்
இந்திய நாட்டினை அவனும் – உடன்
தன்வயப் படுத்தியே கொண்டான்
சிறைப்பட்ட இந்திய நாட்டின் –
வெகு
நிறைவான கனிம வளங்கள் – உடன்
யாவையும் கொள்ளை கொண்டான் –
தேவை
யானதை அள்ளியே சென்றான்
சிறைப்பட்ட இந்தியத் தாயின் – பல
செல்வங்கள் கொள்ளை போக – மனத்தில்
சினம் கொண்ட இந்திய வீரர் – பலர்
சிலிர்த்தெழுந்து ஒன்றெனச்
சேர்ந்தார்
அறவழியில் அண்ணல் காந்தியும் –
மாறாய்
அதிரடியாய் சுபாஷ் சந்திர
போசும் – உடன்
இருமுனைத் தாக்குதல் நடத்தி –
வெள்ளையனை
மறுமுனை ஓடச் செய்தனர்
வெள்ளையனை விரட்டி யடித்து – நம்
விடுதலையை வென்றெடுத்து – இந்திய
மண்ணின் மானம் காத்து – முன்னோர்
மகிழ்வுற வைத்தார் நம்மை
இதைப் பேணிக் காத்திட வேண்டும் –
இதன்
பெருமையைக் கொண்டாட வேண்டும்
சாதி மதங்களைக் கடந்து – நாம்
சமத்துவ வாழ்வினைத் தொடங்க
மனத்தினில் உறுதியும் கொள்வோம் –
நாம்
மகிழ்வுடன் உலகினை வெல்வோம்
வாழ்க நம் இந்தியக் குடியரசு!
வளர்க நம்
இந்தியப் புவியரசு!
வாழ்க பாரதம்! வளர்க நம் சகோதரம்!
---கவிஞர். வ.
கோவிந்தசாமி
இளநிலை உதவியாளர்,
அரசு மேனிலைப் பள்ளி,
இலந்தக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக