இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்



                      பள்ளியின் முப்பெரும் விழா 2014-15
அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம்.
முப்பெரும் விழா ஏப்ரல் 2015

( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா )

இடம்: அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை       நாள்: 08/04/2015

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து :     மாணவர்கள்

வரவேற்புரை:             திரு.வெ.பாலகிருஷ்ணன்அவர்கள் உதவித் தலைமையாசிரியர்.
ஆண்டறிக்கை வாசித்தல்: திருமதி. இரா. துர்க்கா தேவி,  தமிழாசிரியர்
தலைமை    :            திரு. அ.வடிவேல்  அவர்கள், தலைமையாசிரியர்
முன்னிலை  :              திரு. ஆ.மோகன் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்
சிறப்பு விருந்தினர்:        திரு.பி. இளந்திரையன் அவர்கள், இயற்கை வேளாண் அமைப்பு, ஒட்டன்சத்திரம்
மரக்கன்றுகள் நடுதல்  
வாழ்த்துரை  :            திரு. வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
                          திரு. திருவேங்கடம் அவர்கள் கிராமக்கல்விக்குழு
திரு.நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
திரு.சுப. ரெங்கசாமி அவர்கள், EX.பெ.ஆ.க.தலைவர்
                          திரு.என்.சீத்தா ராமன் அவர்கள், ஊரார்.
                          திரு. இராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்
                          திருமதி.வெ. ஆண்டாள், SMDC உறுப்பினர்  
                          திரு.இ. சம்பத் அவர்கள்,SMDC உறுப்பினர்
                          திரு. து. முருகேசன் அவர்கள் முன்னாள் உடற்கல்வி   ஆசிரியர் &  ஆசிரியர்கள்
கவிதை வாசித்தல் :      திரு. வ. கோவிந்தசாமி அவர்கள், இளநிலை உதவியாளர்
பரிசளிப்பு நிகழ்வு
கலை  நிகழ்ச்சிகள்
நன்றியுரை   :         திரு. வீ. முத்துச்சாமி  அவர்கள், முதுகலை ஆசிரியர்
விழாத் தொகுப்புரை:   திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்

நாட்டுப்பண் :          மாணவர்கள் 
                 

வியாழன், 5 மார்ச், 2015

விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள்


            விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள்

கடந்த 24/02/2015 அன்று இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் தலைமை வகிக்க  ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ. மோகன் அவர்கள் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டன.  தலைமையாசிரியர் மற்றும் ஊராட்சித்தலைவர் ஆகியோர் கொடி அசைக்கப் போட்டிகள் தொடங்கின. பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. து.முருகேசன் மற்றும் தற்போது பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் ஆகியோர் போட்டிகளுக்கான நடுவர்களாக இருந்தனர். பொது மக்களும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். கபடி, கைப்பந்து  மற்றும் கால்பந்து ஆகிய குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியைத் தழுவிய வீரர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதக்கங்களையும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கிக் கௌரவித்தார்.
     இந்த நிகழ்வில்  பங்கேற்ற பள்ளி மாணவர்கள் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் முதலான போட்டிகளில் வெற்றி பெற்றனர். அவர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் பதக்கங்களையும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி ஊக்கமூட்டினார். கல்வியுடன் விளையாட்டும் மாணவர்களுக்கு முக்கியம் என்பதுடன் விளையாட்டுச் சாதனைகளுக்கு அரசு உயர்கல்வியிலும் பணி வாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினார்.