எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி முடிவுகள் 2014-2015
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இந்தக்கல்வி ஆண்டில்
தேர்வெழுதிய 57 மாணவர்களுள் 53 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 93 சதவீதம்.
477/500 மதிப்பெண்
பெற்று கி.கீர்த்தனா முதலிடத்திலும் 469/500 மதிப்பெண்
பெற்று இரா. கோகுல் இரண்டாம் இடத்திலும் 463/500 மதிப்பெண் பெற்று செ.கவிதா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
கி.கீர்த்தனா 477/500
![]() | |
இரா.கோகுல் 469/500
செ. கவிதா 463/500
பாட வாரியாகத்
தேர்ச்சி சதவீதம் வருமாறு;
தமிழ் - 98%
ஆங்கிலம் -93%
கணிதம் -100%
அறிவியல் -100%
சமூக அறிவியல் -95%
நூற்றுக்கு நூறு
மதிப்பெண்கள்:
கணிதப் பாடத்தில் மூன்று மாணவர்களும்,
அறிவியலில் இரண்டு மாணவர்களும், சமூக அறிவியலில் மூன்று மாணவர்களும் நூற்றுக்கு
நூறு பெற்றுள்ளனர்.
22 மாணவர்கள் 400
மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் சாதனை புரிந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பள்ளியின்
தலைமை ஆசிரியர் திரு.அ. வடிவேல் எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., அவர்கள் பாராட்டினார்.
மேலும் அம்மாணவர்களைப் பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், இலந்தக்கோட்டை
ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ.மோகன், பெ.ஆ.க. தலைவர், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர் திரு.வ.கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்து
பாராட்டினர்.