ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - பிரியாவிடை விழா

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - பிரியாவிடை விழா

      நம் பள்ளியில் கடந்த ஒரு வருடமாகச் சிறப்பாகப் பணியாற்றிய தலைமை ஆசிரியர் திரு.அ.வடிவேல் எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., அவர்கள் பணியிட மாறுதலில் 14/08/2015 பிற்பகல் திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி அரசு மேனிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளார். 

      காட்சிக்கு எளியனாக கடுஞ்சொல் அல்லாதவராகச் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அரவணைத்துச் சென்ற திரு. வடிவேல் அவர்கள் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தொடங்கிய காலம் தொட்டு இதுவரை பெற்றிராத அளவு உச்ச மதிப்பெண்ணைப் பெற வைத்தவர்.

      தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய போதும் ஒரு தந்தையாக, தோழனாக இருந்து எந்தப் பிரச்சனைகளுக்கும் தோளோடு தோள் கொடுத்துத்  தாங்கியவர். பணியிட மாறுதலில் செல்லும் அவருக்குப் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் திரு. வெ. பாலகிருஷ்ணன் அவர்கள்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகப் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசினை வழங்கினார்.

       மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க அவர்தம் கண்களும் கசிய பிரியா விடை கொடுத்தார்.  நம் தலைமை ஆசிரியர் திரு. வடிவேல் அவர்கள் அடுத்தடுத்து கல்வித் துறையில் பல பதவி உயர்வுகள் பெற்று வலம் வர இந்த வலைப்பூ மலர் தூவி வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறது. 


வாழ்க வளர்க திருவாளர் வடிவேல் அவர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக