இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பள்ளிப் பரிமாற்றத் திட்டம் 2021-2022

      2021-2022 ஆம் கல்வியாண்டில் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளிக்கும் இல.செட்டியூர், ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளிக்கும் பள்ளிப் பரிமாற்றம் 25/02/2022  வெள்ளிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதற்கென நமது பள்ளி சார்ந்த நிழற்படத் தொகுப்பு, பிபிடி கோப்பு ஒன்று மற்றும் நமது பள்ளி பற்றிய காணொளி இவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.  கீழே தரப்பட்டுள்ள இணைப்பினைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து காணலாம்.   

நிழற்படத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்ய

நமது பள்ளிக்கான காணொளியைத் தரவிறக்குக

பள்ளிப் பரிமாற்றம் ppt தரவிறக்கம் செய்க

சனி, 5 பிப்ரவரி, 2022

தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு உருவாக்கமும் வெளியீடும்


            திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வாசித்தலில் திறன் குறைவுடைய மாணவர்களை முன்னேற்றும் நோக்கில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திருமிகு. வெ.ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டலில், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய நான்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில், ஆத்தூர், பள்ளப்பட்டி, எஸ்.வாடிப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி ஆகிய நான்கு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களின் மேற்பார்வையில் 10 தமிழாசிரியர்கள் கொண்ட குழு வாசிப்புப் பயிற்சிக்கட்டகம் தயாரித்தது. 

            இந்தக் கட்டகம் மரபார்ந்த பொதியாக மட்டுமில்லாமல் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற்போல், இணையவழி வலையொளிப் பாடங்கள் இணைத்திருப்பது சிறப்பு. மாணவர்களை வளப்படுத்துவதுடன், தமிழ் மொழி பயிற்றுவிக்கும் தமிழாசிரியர்களை வளப்படுத்தும் கட்டகமாகவும் அமைய வேண்டும் என்ற முனைப்பில் தமிழிலக்கிய நூல்கள், மொழியாசிரியர்களுக்குத் தேவையான நோக்கு நூல்கள் ஆகியவற்றை அள்ளி வழங்கும் இணைய இணைப்புகள் இறுதியாகத் திரட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கட்டகத்தின் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியின் பங்களிப்பு எண்ணிப் பெருமகிழ்வும் நெகிழ்வும் அடைகிறோம். தமிழ் கூறும் நல்லுலகம் இக்கட்டகத்தைப் பயன்படுத்தி அன்னைத் தமிழ் மொழியை அழகுறக் கற்று அணி செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.       

என்றும் தமிழ்ப் பணியில், 

முனைவர் கொ.சுப.கோபிநாத், 

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்),

அரசு மேனிலைப் பள்ளி,

இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் - 624620.

தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு - பதிவிறக்கம் செய்க