செவ்வாய், 10 அக்டோபர், 2017

தூய்மை பாரதம் கட்டுரைப்போட்டி மாவட்ட அளவில் பரிசு

தூய்மை பாரதம் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு

தூய்மை பாரதம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி பதினோராம் வகுப்பில் படிக்கும் மாணவி செல்வி.ச.மகிளாதேவி  இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன. அம்மாணவிக்குப் பள்ளியின் சார்பிலும் பரிசு வழங்கப்பட்டது.புதன், 6 செப்டம்பர், 2017

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்


அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 05/09/2017 செவ்வாய்க்கிழமை சிறப்பாக ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ. பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி.பிரியங்கா வரவேற்றார். ஆசிரியர் பணியின் பெருமை, அர்ப்பணிப்பு, ஆசிரியர் பணி மூலம் பெரும்பதவிகளை அலங்கரித்த பெரியோர்கள் பற்றித் தலைமையாசிரியர் எடுத்துரைத்தார்.
மாணவிகள் செல்வி. ச.மகிளாதேவி, செல்வி.ம. சசிரேகா ஆகியோர் ஆசிரியர் தினம், ஆசிரியர்களின் சிறப்புகள், தமது ஆசிரியர்களிடம் பெற்ற – கற்றுக்கொண்ட நல்லொழுக்கலாறுகள் ஆகியவற்றைப் பேசினர்.
இந்த நிகழ்வில் நம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்(ஆங்கிலம்) திருமதி.க.விஜயபிரியா அவர்கள் உரையாற்றினார்.
மேலும், ஆங்கில இலக்கியமன்றத்தின் சார்பில் நடத்தப்பெற்ற பேச்சு, கட்டுரை, வினாடி வினா முதலான போட்டிகளுக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.  மாணவர்கள் பிரமிடு செய்தும், குழு நடனம் ஆடியும் கலை நிகழ்ச்சியை விருந்தாக்கினர். பத்தாம் வகுப்பு மாணவி செல்வி. ம. ராகவி நன்றி நவின்றார்.