திங்கள், 13 நவம்பர், 2017

வெள்ளி, 10 நவம்பர், 2017

TECHNO CLUB போட்டியில் வட்டார அளவில் இரண்டாம் பரிசு

TECHNO CLUB போட்டியில் வட்டார அளவில் இரண்டாம் பரிசு


               திண்டுக்கல் மாவட்டத்தில் TECHNO CLUB சார்பாக குஜிலியம்பாறை வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில் நம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு அ பிரிவில் படிக்கும் மாணவன் செல்வன் வி.அபினேஷ் இரண்டாம் பரிசு பெற்றுள்ளான். அம்மாணவனுக்குப் பரிசுத் தொகை ரூ.800 க்கான காசோலை வழங்கப்பெற்றுள்ளது.
        வாழ்த்துகள் அபினேஷ்

வியாழன், 9 நவம்பர், 2017

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வட்டார அளவிலான போட்டிகள்

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வட்டார அளவிலான போட்டிகள் - இலந்தக்கோட்டை பள்ளியின் சாதனைகள்


            கடந்த 7/11/2017 எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  தொடர்பான போட்டிகள் பள்ளி அளவில் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் இன்றைய தினம் 09/11/2017 வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர்.

              குஜிலியம்பாறை வட்டார அளவிலான போட்டிகள், குஜிலியம்பாறை அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றன.

               இந்தப் போட்டிகளில் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி பெற்ற பரிசு விவரங்கள் வருமாறு:

ச. மகிளாதேவி - கட்டுரைப் போட்டி - முதல் பரிசு
ரெ.கிரிஜோதீஸ்வரி - பாட்டுப் போட்டி - முதல் பரிசு
ம. சசிரேகா - பேச்சுப் போட்டி - முதல் பரிசு
பா. கோகிலா - கவிதைப் போட்டி - இரண்டாம் பரிசு
ரெ.மகேஸ்குமார் - ஓவியப் போட்டி - இரண்டாம் பரிசு

          வட்டார அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, குஜிலியம்பாறை அரசு மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. க.மகேந்திரன், ஆர்.புதுக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு.சரவணக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.