இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 22 நவம்பர், 2018

வினாடிவினா புதிர்ப் போட்டியில் கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

வினாடி வினாப் போட்டியில் இரண்டாம் இடம்
பள்ளிக் கல்வித்துறை RMSA சார்பில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெற்றது.  வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான வினாடி வினா நிகழ்ச்சி வினாடி வினா நிகழ்ச்சி வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 34 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். இம்மாணவர்களுக்கு வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் திரு பிச்சைமுத்து அவர்கள் பாராட்டி பரிசளித்தார்.












































திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் திண்டுக்கல் வாசிக்கிறது (இலந்தக்கோட்டை)

திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் திண்டுக்கல் வாசிக்கிறது (இலந்தக்கோட்டை)

                          இன்று 22 11 2018 திண்டுக்கல் இலக்கிய களத்தின் சார்பாக இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் திண்டுக்கல் வாசிக்கிறது என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான நூல்களை வாசித்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. பீட்டர் அவர்கள் புத்தக வாசிப்பின் மேன்மை அறிவு வளர்ச்சி சமுதாய முன்னேற்றம் குறித்து பேசினார்.