செவ்வாய், 25 ஜூலை, 2017

சாரணர் இயக்க ம் தொடக்க விழா நிகழ்ச்சி

பாரத சாரண சாரணியர் சங்கம்
தொடக்க விழா அறிக்கை
இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் சங்கத்தின் தொடக்க விழா சூலைத் திங்கள் 12 ஆம் நாள் மாலை 3.30 மணியளவில் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் அவர்களின் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவில் திருமதி.செள.கவிதா, பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். திரு.ப.வீரமணி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
விழாவின் போது சாரண சாரணியர் சங்கத்தைத் தோற்றுவித்த திரு.பேடன் பவல் அவர்களைப் பற்றியும் இந்த சங்கத்திலுள்ள் மாணவர்களின் சமுதாயப் பங்கு பற்றியும் எடுத்துரைக்கப் பட்டது. இறுதியாக தேசிய கீதம் முழங்க நிறைவடைந்தது. கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக