புதன், 27 ஜனவரி, 2016

குடியரசு தின விழா நிகழ்வுகள்

                                              குடியரசு தின விழா நிகழ்வுகள் 


                                இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பா. பாண்டியன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் கிராமக் கல்விக்குழுத் தலைவர் திரு. திருவேங்கடம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் திரு. இராமமூர்த்தி, பள்ளி கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள், இலந்தக்கோட்டை ஊரார் திரு. சீத்தாராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் உரைவீச்சு, கவியரங்கு, நாடகம், கோலாட்டம், நடனம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தேறின. விழா மிகவும் சிறப்பாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக