வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மாற்று எரிசக்தி விழிப்புணர்வு & நீர்வள ஆதாரங்கள் விழிப்புணர்வு நாள்                            24/09/2014 புதன்கிழமை அன்று இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க.செ. அருள்ஜோதி அவர்கள் தலைமையில் தேசிய பசுமைப்படைப் பொறுப்பாளர் திரு. வ. சௌந்தரராஜன் அவர்கள் மாற்று எரிசக்தி பயன்படுத்துதல், மரபு சாரா எரிபொருள் பயன்பாடு, நீர் வளங்களைப் பாதுகாத்தல், நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அன்றைய தினம் மாணவர்களுக்கு மாற்று எரிசக்தி விழிப்புணர்வு பற்றிய ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர் மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக