புதன், 24 செப்டம்பர், 2014

உலக ஓசோன் விழிப்புணர்வு நாள் - நிகழ்வுகள்


        

          உலக ஓசோன் விழிப்புணர்வு நாள் – நிகழ்வுகள் 


     திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 11/9/2014 அன்று உலக ஓசோன் விழிப்புணர்வு நாள்  பள்ளியில் இயங்கி வரும் தேசிய பசுமைப் படை சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் தலைமையேற்றுத் தொடக்கி வைத்தார். பூமியைக்காக்கும் கவசமான ஓசோன் தற்போது பாதிப்படைந்துள்ள நிலை, அதைக் காக்க நாம் மேற்கொள்ளவேண்டிய செயல்கள், பெறவேண்டிய விழிப்புணர்வு பற்றிப் பள்ளியின் முதுகலைத் தாவரவியல் ஆசிரியரும், பள்ளி  தேசிய பசுமைப் படையின் பொறுப்பாளருமான திரு.வ. சௌந்தரராஜன் உரை நிகழ்த்தினார். மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டன. மேலும், ஓசோன் விழிப்புணர்வுப் பேரணி நடத்தி முழக்கங்கள் முழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக