செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ஆசிரியர் தின விழா நிகழ்வுகள்ஆசிரியர் தினவிழா நிகழ்வுகள்

          திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  மாணவர்கள் ஆசிரியர்களை இனிப்புகள் வழங்கிப் பள்ளிக்கு வரவேற்றனர்.  மேலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக் வெட்டும் நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் கேக் வெட்டி இனிப்புகளைப் பகிர்ந்தார்.

           அன்றைய தினம் வகுப்பில் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களைப் போலக் கற்பித்தனர். இந்த நிகழ்வு ஆசிரியர்களுக்குச் சிறந்த பின்னூட்டமாக இருந்தது.
           மாலை மூன்று மணி அளவில் ஆசிரியர் தின விழா பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கட்டடக் குழுத் தலைவர் திரு. நம்பெருமாள், பெ.ஆ.க. பொருளாளர் திரு. இராமமூர்த்தி. கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. திருவேங்கடம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். 
           தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர் தின விழாவிற்குப் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “ தற்காலச் சூழலில் கல்வி கற்றல் கற்பித்தலில் மாற்றம் தேவைப்படுவது ஆசிரியர்களிடமா? மாணவர்களிடமா?” எனும் தலைப்பில் பன்னிரு மாணவர்கள் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர். முன்னாள் ஆசிரியரான திரு. நம்பெருமாள் அவர்கள் நடுவராக இருந்தார்.  கலைகட்டிய இந்தப் பட்டிமன்ற நிகழ்வில் சிறப்பாகப் பேசிய மாணவர்கள் இளையரசி, மகிளாதேவி, கோகுல் ஆகியோர்க்குத் தலைமையாசிரியர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக