வெள்ளி, 29 நவம்பர், 2013

மாணவர்களின் படைப்புகள்

மழைநீர்                                                                                
மண்ணுலகம் பெற்ற
மகத்தான வரம் மழை – அதன்
மாண்புக்கு இல்லை நிகரான விலை
தன்னிகரற்ற தரணிக்கு – அதன் 
தனிப்பெருமை 
முதல் காரணம் மழை
உலகின் உயிர் சக்தியாய்
ஒப்பற்ற இயற்கை வளங்களும்
எண்ணற்ற வளங்களும்
ஏராளமான பயிர்களும்
தோன்றிடக் காரணம் மழை
நீர் வளம் இல்லையேல்
நிலவளம்  இல்லை
நிலவளம் இல்லையேல்
பயிர் வளம் இல்லை
பயிர் வளம் இல்லையேல்
உயிர்வளம்  இல்லை
மழைநீர் உலகின் உயிர் நீர் !      
கோ. சுதர்சனன், ஒன்பதாம் வகுப்பு, அ  பிரிவு.  

     குடிநீர்   
இரா.கோகுல், ஒன்பதாம் வகுப்பு
அ பிரிவு 
                  உயிரினங்களின் ஜீவசக்தி 
                  உடல் நலத்தின் மகாசக்தி
                  அதன் தூய்மை காப்பது நம்                   கடமை
                  அதைக் காக்க மறப்பது                       முழுமடமை   


1 கருத்து:

  1. அருமையான பதிவு. இப்படிப்பட்ட மாணவர்களின் படைப்புகள் வெளி உலகத்திற்குக் கொண்டு வர வேண்டும். சாதிக்கத் துடிக்கும் இளம் தீரர்களைத் தமிழ் வலை உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. வாழ்த்துகளுடன், தமிழ்க்கோ, மதுரை

    பதிலளிநீக்கு