வியாழன், 21 நவம்பர், 2013

பள்ளியின் முக்கிய நிகழ்வுகள்

கடந்த ஆண்டு அரசுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பா. கதிரேசன் அவர்கள் பரிசு வழங்குகிறார். அருகில் வேடசந்தூர் தொகுதிச்  சட்டமன்ற உறுப்பினர்  உயர்திரு. பழனிச்சாமி அவர்கள் மற்றும் இலந்தக்கோட்டை ஊராட்சித் தலைவர் திரு.ஏ.மோகன் அவர்கள் ஆகியோர்  உள்ளனர்.

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் விலை இல்லா மடிக் கணினிகளை வேடசந்தூர் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. பழனிச்சாமி அவர்கள் வழங்குகிறார்.

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,  ஊராட்சித் தலைவர் , மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக